Pointing Others Mistake..!!
Once a Master was teaching lesson to his four Disciples. After he completed that lesson he said to his disciples, ′No one should speak until I come back′, by saying this master left.
After a while sky got cloudy and it looked like it will start to rain. Seeing this one of the disciple said, ′It seems like it is going to rain today.′ Listening to him second and third disciple responded to his words. Those three disciples spoke in master′s absence but fourth disciple still didn′t said anything and silently kept studying that lesson.
After an hour master came back. As soon as disciples saw master, three of them started pointing the rest one. Seeing this master said, ′It means all three of you spoke in my absence. Only one who obey me was fourth disciple and he was the only one to follow my instructions properly. Surely he will become a better person in future.
But I am not sure about three for you. You all disobeyed me just to complain about other one and just because of this you didn′t realized your own mistake.′
After listening to the master, those three disciples felt very shameful about their act and accepted their mistake. They asked for forgiveness and promised to never repeat that mistake.
Moral :
This happen with most of us, We focus so much on point out other people mistake that we don′t realized that we ourselves are doing same mistake.
ஒரு நாள் குரு தன்னுடைய நான்கு சீடர்களுக்கு பாடம் கற்பித்து கொண்டிருந்தார். அவர் அந்த பாடத்தை நிறைவு செய்தபின் தம் சீடர்களிடம், 'நான் திரும்பி வரும் வரை யாரும் பேசக்கூடாது" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து வானம் மேகமூட்டமாகி, மழை பெய்ய இருப்பது போல் தோன்றியது. இதைப் பார்த்த சீடர் ஒருவன் 'இன்று மழை பெய்ய போகிறது போல் தெரிகிறது" என்றான். இதைக் கேட்ட மற்ற இரண்டு சீடர்களும் அவனுடைய வார்த்தைகளுக்கு பதிலளித்தனர். அந்த மூன்று சீடர்களும் குரு இல்லாத போது பேசினார்கள், ஆனால் நான்காவது சீடன் எதுவும் பேசவில்லை, அமைதியாக பாடத்தை படித்து கொண்டிருந்தான்.
ஒரு மணி நேரம் கழித்து குரு திரும்பி வந்தார். சீடர்கள் குருவை பார்த்தவுடனே, அவர்கள் மூன்றுபேரும் மற்றவர்களை குறை கூற ஆரம்பித்தார்கள். குறை கூறுவதை கேட்ட குரு, நீங்கள் ஒருவொருக்கொருவர் குறை கூறுவதை பார்த்தால், நான் இல்லாத போது மூவரும் பேசியுள்ளீர்கள். எனக்குக் கீழ்ப்படிந்த ஒரே ஒரு நான்காவது சீடன் மட்டுமே என் அறிவுரைகளை சரியாகப் பின்பற்றி உள்ளான். நிச்சயமாக எதிர்காலத்தில் அவன் ஒரு நல்ல மனிதன் ஆகிவிடுவான்.
உங்கள் மூவரின் நிலை எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியாது. மற்றவர்களை பற்றி குறை கூறவே நீங்கள் மூவரும் என்னுடைய வார்த்தைளுக்கு கீழ் படியவில்லை. அதனால்தான் உங்களுடைய தவறுகளை உங்களால் உணர முடியாமல் போனது.
அந்த மூன்று சீடர்களுக்கும் குரு சொன்னதைக் கேட்ட பிறகு, அவர்களுடைய செயலை நினைத்து மிகவும் வெட்கமடைந்து, செய்த தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டார்கள். மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.
நீதி :
இது நம்மில் பலருக்கு நடக்கிறது, மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம், நாமும் அதே தவறை தான் செய்கிறோம் என்பதை நம்மால் உணரமுடியவில்லை.