உங்களுக்குத் தெரியுமா?
குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்போம். அதற்குப் பின்னால் சில தகவல் உண்டு!
பூங்காவிலோ, பொது இடத்திலோ இரண்டு முன்னங்கால்களைத் தூக்கியபடி நிற்கும் குதிரையின் மீது ஒருவர் அமர்ந்திருப்பதுபோல சிலை இருந்தால், அவர் போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார் என்று பொருள்.
முன்னங்கால்களில் ஒன்று மட்டும் துக்கிய நிலையில் இருக்கும் குதிரையில் அந்த வீரர் அமர்ந்திருந்தால், போர்க்களத்தில் படுகாயம் அடைந்து இறந்தார் என்று பொருள்.
நான்கு கால்களும் தரையில் பதிந்திருக்க சாதாரண நிலையில் நிற்கும் குதிரையின் மீது அமர்ந்திருந்தால், அவர் இயற்கையான மரணம் எய்தினார் என்று பொருள்.