மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 4 December 2018

இன்றைய புதிர் கணக்கு

     நீங்கள் ஒரு சிறைக்கைதி, உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய விளையாட்டை விளையாடுவதன் மூலம் உயிர் பிழைத்துக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு  கொடுக்கப்படுகிறது.

50 வெள்ளை கோலிகுண்டுகள், 50 கருப்பு கோலிகுண்டுகள், மேலும் இரண்டு காலி கிண்ணங்கள் உங்களிடம் கொடுக்கப்படுகின்றன.

இரண்டு காலி கிண்ணங்களில் இந்த கோலிக் குண்டுகளை பிரித்து போட வேண்டும். அனைத்து கோலிகுண்டுகளையும் பயன்படுத்தி நீங்கள் அதை எவ்வாறு வேண்டுமென்றாலும் பிரித்துக் கொள்ளலாம்.

உங்கள் கண்களை கட்டி, அந்த கிண்ணங்கள் வேறு இடத்திற்கு மாற்றிவிடப்படும். பிறகு ஒரு கிண்ண த்தை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு கோலிகுண்டை எடுக்க வேண்டும்.

நீங்கள் எடுத்த கோலி குண்டு வெள்ளை நிறமாக இருந்தால் நீங்கள் உயிர் வாழ்வீர்கள். ஆனால், கருப்பாக இருந்தால் நீங்கள் இறந்த வீடுவீர்கள்.

நீங்கள் வெள்ளை கோலிகுண்டை தேர்ந்தெடுக்க ஏதுவாக கோலிகுண்டுகளை எவ்வாறு பிரிப்பீர்கள்?

Pages