மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 13 December 2018

இந்தியாவின் செஸ் ராஜா !


விஸ்வநாதன் ஆனந்த்
11.12.1969 மயிலாடுதுறை, தமிழ்நாடு.

      'புத்திசாலிகளின் விளையாட்டு' என்று உலக அளவில் சொல்லப்படும் சதுரங்க விளையாட்டில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக தமிழர் ஒருவர் அடி எடுத்து வைத்தார். 4 வயதில் தேசிய சப் ஜூனியர் சாம்பியன், 14 வயதில் இந்திய சதுரங்க சாம்பியன், 15 வயதில் அனைத்துலக மாஸ்டர், 18 வயதில் உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் என வரிசையாக வென்று, இந்திய செஸ் உலகின் அசைக்க முடியாத 'ராஜா' ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்.


நல்ல நினைவாற்றல் இருந்ததை உணர்ந்த அவரது அம்மா ஆறு வயதிலிருந்தே செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தார். பின்பு, முறையாகக் கற்க ஆரம்பித்து வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போதே உலக அளவில் செஸ் தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தார். 



அடுத்து நடந்த சர்வதேச போட்டியில் வென்று 1988இல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார். தொடர் சாதனைகள் புரிந்ததால் 18 வயதிலேயே இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருதும் அவருக்குக் கிடைத்தது. அடுத்ததாக, 2000, 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்று ஐந்து முறை உலக சாம்பியன் பட்ட மணிமகுடம்.



'தினமும் ஒருமணி நேரம் செஸ் விளையாடிய பின் பாடங்களை படித்தால் அவை மனத்தில் ஆழமாகப் பதியும்' எனச் சொல்லும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் நமக்கெல்லாம் முன்மாதிரி. 



இந்திய அரசு விருதுகள்

1985: அர்ஜுனா
1987: பத்ம ஸ்ரீ
1991 - 1992: ராஜீவ்காந்தி கேல் ரத்னா
2000: பத்ம பூஷண்
2007: பத்ம விபூஷண்

Pages