மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 8 December 2018

படிக்க சரியான நேரம் எது?


     எதைச் செய்ய வேண்டுமானாலும், அதற்கென ஒரு நேரம் இருக்கிறது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். மாணவர்கள், தங்களின் பாடங்களைப் படிப்பதற்கு ஏற்ற நேரம் எது? என்பது குறித்து பலர் பலவிதமான ஆலோசனைகளை வழங்கி இருக்கலாம்.




     சிலருக்கு இரவில் விழித்து படிப்பது பிடிக்கும், சிலருக்கு அதிகாலையில் படிப்பது தான் பிடிக்கும், சிலருக்கோ, மாலையில் தொடங்கி, இரவு 9 மணிக்குள் படித்துவிடுவது பிடிக்கும். எனவே, அவரவர் மனநிலைதான் இந்த விஷயத்தில் முக்கியம்.



     ஆனால், பல மாணவர்களோ தேர்வுக்கு முந்தைய நாள் அல்லது பள்ளி விடுமுறை நாள் தான் தேர்வுக்குப் படிக்கும் நேரம் என்று சொல்வார்கள்.



       இன்னும் சிலருக்கு, காலை உணவை அருந்திய பின்னர், படிக்கத் தொடங்கி, மதிய உணவிற்குள் படிக்க பிடிக்கும். ஏனெனில், மதியத்திற்கு மேல், தூக்கம் சொக்கும் என்பதால், மேற்கண்ட நேரத்தை தேர்ந்தெடுப்பார்கள்.



இப்படியும் சிலர் :



      ஒருவருக்கோ இரவு 12 மணி வரை படிக்க பிடிக்கும், ஆனால் இன்னொருவருக்கோ 9 அல்லது 10 மணி ஆனவுடனே தூக்கம் வர ஆரம்பித்து விடும். ஆனால், காலையில் காற்றடித்த பந்துபோல படுக்கையில் இருந்து துள்ளி எழுவர்.



பெற்றோர்களின் பங்கீடு :



 'இரவு எந்நேரமானாலும் பரவாயில்லை, வீட்டுப்பாடம் எல்லாம் முடித்துவிட்டுத் தூங்கு", எனச்சொல்லி தானும் தூங்காமல், குழந்தைகளையும் தூங்கவிடாத பெற்றோர் ஒருவகை என்றால், 'படிக்கும்போது தூங்கிவிழாமல் போய்த் தூங்கு, காலையில் 4 மணிக்கு எழுந்து படி" எனச்சொல்லி அவர்களை அலாரக் கடிகாரமாக அலறவைக்கும் பெற்றோர் இன்னொரு வகை.



உங்களுக்கான சரியான நேரம் :



   உங்களுக்கு எந்நேரமும் சரியெனத் தோன்றினால், இரவில் 10 மணி வரை நன்றாகப் படித்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். காலையிலும் 5 மணிக்கு எழுந்து, படித்தவற்றை நினைவுகூறுங்கள் அல்லது மீதியிருப்பதைப் படியுங்கள். மூளைக்கும் ஓய்வு மிக அவசியம். தேர்வாக இருந்தாலும் உங்கள் மூளையை ஓய்வின்றி பட்டினி போடாதீர்கள்.



   எனவே, மாணவர்களே, படிக்கும் நேரத்தை தேர்ந்தெடுப்பதென்பது, முற்றிலும் உங்களின் சவுகரியம் மற்றும் விருப்பம் சார்ந்தது. ஏனெனில், நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, எந்த நேரத்தில் படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. 

Pages