மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 3 June 2022

நவீன மிதிவண்டியின் வரலாறு..!

மிதிவண்டி 



     கிராமப்புறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றைக்கும் முதன்மையான வாகனமாக இருப்பது மிதிவண்டி தான். நாம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளுக்கு அடித்தளமிட்டது மிதிவண்டி தான். மிதிவண்டி என்பது மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி ஆகும்.



      17-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக். இவர் ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.


         1791-ஆம் ஆண்டு முழுவதும் மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். ′The Celerifere′ என்று அழைக்கப்பட்ட இந்த மிதிவண்டியில் திசைமாற்றி, மிதி இயக்கி, தடை என எதுவும் கிடையாது.


        கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு சைக்கிளை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது.


      லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் என்ற கொல்லர் உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி மிதிவண்டி தயாரிக்க முயற்சித்தார். தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு இவர் உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார்.


       உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவண்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் என்பவர் வடிவமைத்தார். அதைதொடர்ந்து மேம்பட்ட மிதி இயக்கி தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி இயக்கி ஒன்றைத் தயாரித்து வெற்றிகொண்டார்.


       பென்னி பார்த்திங் என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி என்ற கொல்லருடன் இணைந்து மிதிவண்டியின் ரிம் மற்றும் ஸ்போக்ஸ் கம்பிகள் தயாரிப்பதில் வெற்றிகண்டனர்.


       1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.


      1888-ஆம் ஆண்டு ஜான் பாய்ட் டன்லப் என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் குழாய் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார்.


     ′இன்றைய நவீன சைக்கிளின் தந்தை′ என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி என்பவர் ஹென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டார். அவர் கண்டுப்பிடித்த இந்த மிதிவண்டியை தான் நாம் பயன்படுத்துகிறோம்.


Pages