மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 7 December 2018

பூமி சுற்றும்போது அதன் அதிர்வை நம்மால் உணர முடிவதில்லை, ஏன்?


          பஸ் பயணத்தில் ஏற்படும் சில அனுபவங்களை முதலில் பார்ப்போம். பஸ் கிளம்பும்போது இருக்கையின் பின்னோக்கி உந்தப்படுகிறோம்; பிரேக் பிடித்தால் முன்நோக்கிச் செல்கிறோம். பஸ் சீரான வேகத்தில் செல்லும்போது முன், பின் உந்துதல் எதுவும் இருப்பதில்லை. நெடுஞ்சாலைகளில் பஸ் செல்லும்போது அதன் இயக்கம் நமக்குப் புலப்படுவது இல்லை. 

      நியூட்டன் முதல் விதி இதைத்தான் சுட்டுகிறது. ஒரு பொருள் ஓய்வாக இருக்கும்போது அது ஓய்வாக இருக்கவே முயற்சி செய்யும். அதனையும் மீறி அதன் மீது உந்தம்- விசை செலுத்தும்போதுதான் அது நகரும். அதுபோல ஒரு பொருள் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது அதே சீரான வேகத்தில் செல்லவே முயற்சிக்கும். அதற்கு எதிராக விசை செலுத்தினால் மட்டுமே அதன் இயக்கம் மாறும்; நிற்கும். அதாவது இயற்பியல் பார்வையில் சீர் வேகமும் ஓய்வு நிலையும் ஒன்றுதான்!

Pages