மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 18 September 2022

மூங்கில் மரம் ___ மனித இனத்தின் வரம்.!!!!


           மூங்கிலின் அறிவியல் பெயர் பாம்புசியே என்பதாகும். மூங்கில் போவேசியா குடும்பத்தைச் சேர்ந்தது. வறட்சி நிறைந்து, தண்ணீர் பற்றாகுறையாக இருந்தாலும் நன்கு வளரும். மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், மக்களின் நண்பன் என்றும் அழைப்பார்கள். நம் சுற்றுச்சூழலை நல்ல முறையில் பாதுகாக்கும். சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் அதிகமாக வளர்கிறது.



      கிராம மற்றும் நகர்ப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு காற்றில் கார்பன் டை ஆக்ûஸடின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


       எஃகை விட ஆறு மடங்கு வலிமை வாய்ந்தது. அதனால், பயோஸ்டீல் என்றும் அழைக்கப்படுகிறது. மூங்கில் 47 சதவீத கார்பன்டை ஆக்ûஸடை உட்கொண்டு 35 சதவீத ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பெருமளவில் பயன்படுகிறது. மூங்கிலின் மேற்பகுதி சுற்றுப்புற மாசுகளைக் குறைப்பதிலும், வேர்ப்பகுதி மண்அரிப்பை தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் குடிசை வீடுகளைக் கட்டுவதிலும், கைவினைப் பொருள்கள் செய்யவும், சிறுதொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களுக்கு மூலதாரமாக இருக்கிறது.


    வேரிலிருந்து நுனி வரை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது. மூங்கில் அரிசியில் 160 கலோரி இருக்கிறது. மூங்கில் மரத்தின் வேரை அரைத்து முகத்தில் தடவினால் அம்மைத் தழும்பு நீங்கும், சாம்பலைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் அது வெண்மையாகும். சரும நோய்களுக்கு மூங்கில் இலைகள் ஒரு அருமருந்து. காயம் ஏற்பட்டு வீக்கமோ அல்லது இரத்தக் கசிவோ ஏற்பட்டால் இலை அல்லது தண்டுப் பகுதியை எரித்து சாம்பலைத் தடவினால் உடனடியாக குறைந்து விடும்.


      உங்களுக்குத் தெரியுமா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதற்காக மூங்கிலை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கி தாவரப் பட்டியலில் சேர்த்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருக்கிறார். எனினும், வனப்பகுதிகளில் வளரும் மூங்கில் வனப்பாதுகாப்பு சட்டம் 1980-இன் கீழ் தொடர்ந்து நான் மரங்கள் பட்டியலில் தான் இருக்கிறது.


       திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர், திருவள்ளூர் மாவட்டம், திருபாச்சூர் அருள்மிகு வாசீஸ்வரர், நாகப்பட்டினம் மாவட்டம், அருள்மிகு கீழப்பெரும்பள்ளம் நாகநாதர், தேனி மாவட்டம், அருள்மிகு மூங்கில்கணை காமாட்சி அம்மன் ஆகிய திருக்கோவில்களில் தல விருட்சமாக இருக்கிறது. வேதங்களே சுவாமியை வழிபடுவதற்காக மூங்கில் வடிவில் இருப்பதாக சொல்வதுண்டு.


       நாம் எப்போதும் பணிவாக இருக்க வேண்டும் என்பதைத் தான் வளைந்த மூங்கில் அரசன் முடி மேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தன் கீழ் என்ற பழமொழி சொல்லுகிறது. கடலில் கிடைப்பது முத்து, காடுகள் நமது சொத்து.

   
    இன்று உலக மூங்கில் தினம்.  மூங்கில்களைப் பாதுகாப்போம்.

Pages