மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 6 December 2018

ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பின்: ஆடிப்பாடி தமிழ் படி!

         தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்று பயிற்சி நிறுவனம் வழங்கும் பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதே ஆடிப்பாடி தமிழ் படி என்கிற தொடக்கக் கல்வி தமிழ்பாட நூல்.

        மிகச் சிறந்த கற்றல் நோக்கங்கள் மற்றும் கற்றல் வெளிப்பாடுகளை உள்ளடக்கி, ஆர்வத்தை வளர்க்கும் விதமாக, செயல் வழிக் கற்றல் முறையை மையமாக கொண்டு மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எளிய முறை தமிழ்பாட நெறியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

   இந்த தமிழ்பாட நூல்கள் கற்றல் மற்றும் கற்பித்தலை சுவாரசியமானதாக மாற்றும். தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கும் பாடத்திட்டத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

     வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., அவர்கள் இதை வெளியிட்டார். பள்ளிக் கல்வி வெளியீட்டு இயக்குநர் கூறுகையில் இதன் மூலம் ஆக்ஸ்போர்டின் மொழிப்பாடப் பதிப்பின் மீதுள்ள அர்பணிப்பு புரிகிறது என்று குறிப்பிட்டார்.

Pages