Tangram என்ற சீன புதிர் விளையாட்டு 5000 வருடங்களுக்கு முந்தியதாகும். இதனை விளையாடுவதற்கான தகைமை ஆர்வம் மட்டுமே, சிறுவர்களின் கற்பனை வளத்தை பெருக்கவல்லது இவ் விளையாட்டு.
ஒரு சதுரமான அட்டையை இங்கு காட்டியது போல் 7 துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக், இரப்பர், மரத்துண்டு என்பனவற்றிலும் வெட்டிக்கொள்ளலாம்.
இந்த 7 துண்டுகளையும் பயன்படுத்தி உருவங்களை உருவாக்க வேண்டும் எந்த ஒரு துண்டையும் மிகுதியாக வைக்கக்கூடாது என்பது முக்கியம். அத்துடன் ஒரு துண்டின் மேல் இன்னொரு துண்டை வைக்கக் கூடாது. பக்கத்தில் தான் வைக்க வேண்டும்.
பறவைகள், மிருகங்கள், கருவிகள், மனித உருவங்கள் , என இதன் மூலம் 1600 க்கும் அதிகமான உருவங்களை உருவாக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் உருவாக்கலாம்.