Old father Lesson to his Sons..!!
An old man had four sons. He wanted his sons to learn a very important lesson for life. He asked them to go and look at a pear tree that was far away from his house.
When the Winter came he asked his eldest son to go and take look at pear tree. Similarly he asked his second son to go there in the Spring. Third one was sent there in Summer and Youngest son was sent there in fall.
When they all had gone once there and come back. He asked all of them to come to him and describe him about what they had seen.
His all four sons stood in front of him and started to share what they had seem..
Eldest one said, ′Tree was ugly and it was bent′. Second son interrupted and said, ′No, It was covered with green buds.′ Third son disagreed and said, ′It′s blossom smelled really sweet and looked so beautiful.′ Youngest son disagreed with all of them and said, ′It was ripe and fruits were dropping.′
After listening to each one of them old father said, ′All four of you are right. Each of you have seen only one season in tree′s life, therefore you said what you saw the condition of tree at that time of season. Just like tree condition changed with time similar is with human′s. We should not judge someone by only one point of their life. That′s what I wanted you to learn.′
Moral : Life is similar with the seasons.
ஒரு முதியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பாடத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க முதியவர் விரும்பினார். வீட்டிலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு பேரிக்காய் மரத்தை சென்று பார்வையிடும் படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
குளிர்காலத்தில் அவர் தன்னுடைய மூத்த மகனையும், வசந்த காலத்தில் தன்னுடைய இரண்டாவது மகனையும், கோடை காலத்தில் தன்னுடைய மூன்றாவது மகனையும், இலையுதிர் காலத்தில் தன்னுடைய நான்காவது மகனையும் பேரிக்காய் மரம் இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடும் படி கேட்டுக் கொண்டார்.
அவர்கள் எல்லோரும் அங்கு சென்று திரும்பி வந்த பிறகு, தன்னிடம் வந்து அவர்கள் பார்த்ததைப் பற்றி விவரிக்கும்படி முதியவர் கேட்டுக் கொண்டார்.
அவர்கள் நான்கு பேரும் முதியவர் முன் நின்று அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
மூத்த மகன் மரம் அழகற்று இருந்தது, மேலும் அது வளைந்து இருந்தது என்றான், இரண்டாவது மகன் குறுக்கிட்டு இல்லை, அது பச்சை மொட்டுகளால் மூடப்பட்டிருந்தது என்றான். மூன்றாவது மகன் இரண்டாவது மகன் கூறுவதை மறுத்து, அதனுடைய பூவின் வாசனை மிகவும் இனிப்பாகவும், பூ மிகவும் அழகாகவும் இருந்தது என்றான். இளைய மகன் அவர்கள் அனைவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், பழங்கள் கனிந்து, கீழே விழ ஆரம்பித்தது என்றான்.
இதைக் கேட்ட முதியவர், நீங்கள் நான்கு பேரும் கூறுவது உண்மைதான். நீங்கள் ஒவ்வொருவரும் மரத்தின் ஒரே ஒரு பருவத்தை தான் பார்த்துள்ளீர்கள், எனவே அந்த பருவத்தில் அந்த மரத்தின் நிலை என்ன என்பதை நீங்கள் கூறினீர்கள்.
மரத்தின் நிலை காலப்போக்கில் மாறிவிட்டது போல தான் மனிதர்களும். மனிதனின் வாழ்க்கையில் ஒரே ஒரு புள்ளியை வைத்து மட்டுமே நாம் அவர்களை தீர்மானித்து விடக் கூடாது. நான் உங்களுக்கு இதை தான் கற்றுக் கொடுக்க விரும்பினேன் என்றார் முதியவர்.
நீதி : நம்முடைய வாழ்க்கையும் பருவத்தை போலத்தான் இருக்கும்.