மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 2 December 2018

புத்திசாலி சேவல் - சிறுகதை

The Wise Cock and The Wicked Fox..!!

     There lived a wise cock in a village. The cock did its duties well. It would got up 
early in the morning and wake up the people and done it′s daily duties.

     One day the cock was taking rest on a tree top. A wicked fox passed that way. The fox looked up and saw the cock was taking rest on the tree. The fox decided to eat the cock.

    Then the fox said to the cock, ′Hello, dear..! I bring you news from Heaven. There is a new order laid for us. From now on all birds and animals shall become friends and live together in peace′.

     The cock was astonished and asked ′Is it true?′

     The fox replied, ′Yes, of course, If you are in doubt, just come down and see how all animals and birds live together′. Now the cock began to think wise and said, ′ Won′t you wait a minute. A few of our friends are coming along′.

     It was the fox′s turn to be surprised, ′Friends! Who are coming? What do you mean?′ The cock answered ′I can see some Hounds coming. Let us wait for them′.

     On hearing the Hounds sound, the fox got annoyed. He started to run away. The cock asked. ′Why are you running? What happened to our friendship?′ The only reply was ′Forget it.′

    ஒரு கிராமத்தில் புத்திசாலி சேவல் ஒன்று இருந்தது. அது தன்னுடைய கடமைகளை நன்கு செய்து வரும். அது அதிகாலையில் எழுந்து மக்களை எழுப்பி விட்டு தனது அன்றாட கடமைகளை செய்து வந்தது.

    ஒரு நாள் அந்த சேவல் மரத்தின் மேல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு கொடிய நரி ஒன்று அந்த இடத்தை கடந்து சென்றது. நரி அந்த சேவல் மேலே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தது. அப்பொழுது அந்த நரிக்கு அந்த சேவலை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

     உடனே நரி சேவலிடம், வணக்கம் சேவலே, நான் சொர்க்கத்திலிருந்து உனக்கு ஒரு செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நமக்கு ஒரு புதிய உத்தரவு வந்திருக்கிறது. 'இப்போதிலிருந்து எல்லா பறவைகளும் விலங்குகளும் நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு" என்றது.

சேவல் ஆச்சரியப்பட்டு 'இந்த செய்தி உண்மை தானா என்று கேட்டது?"

      அதற்கு அந்த நரி 'ஆம் உண்மைதான், உனக்கு சந்தேகமாக இருந்தால் கீழே வந்து அனைத்து விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கின்றது என்பதை பார்" என்றது நரி.. உடனே அந்த சேவல் சாதுரியமாக சிந்திக்கத் தொடங்கியது. அதற்கு அந்த சேவல் நரியிடம்.. 'ஒரு நிமிடம் காத்திருப்பாயா நம் நண்பர்கள் சிலர் வருகிறார்கள்" என்றது.

     அந்த நரி ஆச்சரியத்துடன், நண்பர்களா! யாரெல்லாம் வருகிறார்கள்? நீ என்ன சொல்கிறாய் என்றது. அதற்கு அந்த சேவல் இங்கு சில வேட்டை நாய்கள் வரும். அதற்காக தான் நாம் இங்கு காத்திருக்கிறோம் என்றது.

       அந்த வேட்டை நாயின் சத்தத்தை கேட்டதும் அந்த நரி எரிச்சலடைந்தது. உடனே அந்த நரி ஓட்டம் பிடித்தது. அதற்கு அந்த சேவல் ஏன் நீ ஓடுகிறாய்? நம் நட்பு என்ன ஆயிற்று என்றது? உடனே அந்த நரி 'மறந்துவிடு" என்று பதிலளித்துவிட்டு ஓட்டம் பிடித்தது.

Pages