கர்ணனுக்கு உடன் பிறந்த கவச குண்டலம் போல் தமிழனின் உடலை முதல் முதலில் ஒட்டியிருந்தது இந்த வேட்டி அல்லவா?
இலைகளையும், தழைகளையும் சுற்றி உடலை மறைத்து வாழ்ந்த ஆதிகால தமிழன் நாகரீகத்தின் முதல் அடையாளமாக உருவாக்கிய உடை தான் வேட்டி. பருத்தியில் இருந்து பஞ்சை எடுத்து, பஞ்சை நூலாக்கி நெசவாளர்கள் எண்ணத்துக்கு வடிவமாக்கி உருவாக்கியது தான் வேட்டி, சேலை வகையறாக்கள்... !
இது வெறும் உடை அல்ல. உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் அல்லவா அடங்கி இருக்கிறது. என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் வேட்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!
கவித்துவம் இல்லாத இதயங்கள் கூட என்ன விலை அழகே? என்று வர்ணித்து ரசிக்கிறதே! இந்தமாதிரி வேட்டி-சட்டை அணிந்து வருபவருக்கு தனி கம்பீரம் வந்துவிடுகிறது.
நமது பாரம்பரியத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம்.
நாளை வேட்டி தினம் (சனவரி _06)
வேட்டி அணிந்து மகிழ்வோம்.