இன்றைய பொன்மொழி!
நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு 'நதி" போல.. ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கு 'கடலாக"...
சடாகோ சசாகி
🐦 ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.
🐦 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.
🐦 சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.
🐦 அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.
🐦 ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில் (1955) மறைந்தாள்.
முக்கிய நிகழ்வுகள்
🌍 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலீலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் துணைக்கோள்களை கண்டறிந்தார்.
👉 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் சரோஜாதேவி பெங்களூரில் பிறந்தார்.
✈ 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
👉 1925ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி பிறந்தார்.