இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சியும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன.
ஒரு வறட்சியான மாவட்டமாகவே புதுக்கோட்டை உள்ளது. மாவட்டத்தின் நீர் வரத்து பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது.
இம்மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்.
மேலும் சில நிகழ்வுகள்:-
- ஜமெய்க்காவில் 1907ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
- 1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
- 1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
- 1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
- 1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- 1932 - தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.