9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதனிடையே, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.அரசு பிரதிநிதியாக உள்ள நாங்கள் கண்ணீர் சிந்துவதைவிட வேறு வழி இல்லை.போராட்டம் தொடர்ந்தால் முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை எனில் TET தேர்ச்சி பெற்ற 1 லட்சம் பேர் தயாராக உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.