மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 30 January 2019

அரசு அடாவடி: 2 ஆயிரம் பேர் பணியிடை நீக்கம் தீவிரமடைந்தது ஜாக்டோ-ஜியோ போராட்டம்

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56, 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும், 3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் 8ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

         மேலும் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று சென்னை மாநிலம் முழுவதும் 609 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். திங்களன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காவல் துறையினர் மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட லட்சக்கணக்கான ஊழியர்களை கைது செய்தனர். 

      இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள், கைது செய்யப்பட்ட வர்களை திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பிறகும் சென்னையிலும், பிற மாவட்டங்களில் நள்ளிரவு 2 மணிக்கு பிறகும் விடுதலை செய்துள்ளனர். பல இடங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு குடிநீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளைக்கூட காவல் துறையினர் வழங்க மறுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊழியர்களை கைது செய்து 3 மண்டபத்தில் வைத்திருந்தனர். அவர்களுக்கு குடிநீர் உணவு வழங்கவில்லை. பல பெண்கள் மயங்கி விழுந்தனர்.



Pages