டிராப்ஸ் (Drops):
சுமார் 31 மொழிகளை எளிதாக கற்கும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
பிறருடன் உரையாட மொழி ஒரு தடையில்லை என்பதைத் தெரிவிக்கும் இந்த ஆப்பை உலகம் முழுவதும் ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதால், 2018- ஆம் ஆண்டின் சிறந்த ஆப்பாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெட்டிட் (Reddit):
ஒரு தலைப்பைப் பதிவு செய்து அதன் மீது விவாதிப்பதுதான் இந்த ரெட்டிட் ஆப். இது புத்தம்புது திரைப்படம், தொழில்நுட்பம், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதுவாகவும் இருக்கலாம். ஒரு தலைப்பில் ஈடுபாடு உள்ளவர்கள் ஒரு குழுவாக இணைந்து கருத்துகளைப் பதிவு செய்யும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சிரிக்கவும், ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் ரெட்டிட் ஆப் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
விமேஜ் (Vimage):
நாம் எடுக்கும் போட்டோ, வீடியோக்களில் பல்வேறு எஃபெக்ட்ஸ்களை இணைக்கும் இந்த ஆப் மூன்றாம் இடத்தில் உள்ளது.
கலர்ஸ் பை நம்பர்ஸ் (No.draw-colors by number):
குழந்தைகளைக் கவர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்பின் மூலம் எண்களை வண்ணமயமாக்கி விளையாடலாம். இந்த ஆப்பை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த ஆப் நான்காம் இடத்தில் உள்ளது.
நெவர் திங்க் (Neverthink):
சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சிறந்த வீடியோக்களை பட்டியலிட்டு வழங்குவதுதான் இந்த ஆப்பின் பயன்பாடு. பல்வேறு தலைப்புகளில் பிரிக்கப்பட்ட சிறந்த விடியோக்களை தினந்தோறும் பட்டியலிடும் இந்த ஆப் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
டிக்டொக் (Tiktok):
நமது சிறிய அளவிலான வீடியோவைப் பதிவு செய்து, அதை திரைப்படப் பாடல் வரிகள், டைலாக் போன்றவற்றுக்கு ஏற்றாற்போல் மாற்றுவதுதான் இந்த டிக்டொக் ஆப்பின் செயல்பாடு. இளைஞர்களை வசியம் செய்யும் இந்த ஆப் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதைப்போல், கூகுள் டிரைவ் ஆப், 2018ஆம் ஆண்டின் சிறந்த பதிவிறக்கம் செய்து சேமிக்கும் ஆப்பாக உள்ளது.
சமூக வலைத்தள ஆப்பாக முகநூல் ஆப்பும், இணைய தேடுதலில் யூசி பௌரசர் ஆப்பும், ஆன்லைன் விளையாட்டில் பியுபிஜி (PUBG) மொபைல் ஆப்பும், ஆடியோ - வீடியோ பயன்பாட்டில் கானா ஆப்பும், போட்டோ எடிட்டிங்கில் ஸ்னாப்சீடு ஆப்பும் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவின் (ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்) மூலம் கடந்த ஆண்டில் நம்மைப் பிரமிக்க வைத்த இந்த ஆப்களின் செயல்பாடு 2019-இல் அடுத்தகட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.