இயற்கையின் விந்தைகளில் ஒன்றான சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21 ம் தேதிகளில் நிகழ இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர்காலத்தில் வரும் பவுர்ணமியை அமெரிக்க மக்கள் வுல்ஃப் மூன் என்று கூறுகின்றனர் . சூரியனுக்கு , நிலாவுக்கு நடுவில் பூமி பயணிக்கும் போது , சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைபட்டு , பூமியின் நிழல் நிலவின் மீது விழும். அப்போது நிலா சிகப்பு நிறத்தில் தெரியும். இதனை ப்ளட் மூன் என்கிறோம் .
இந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தான் சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் ஆகும். அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும் எனக் கூறப்படுகிறது