மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 19 January 2019

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி


          தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

    இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தவறாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், அதை திருத்தம் செய்துகொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

          இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைத்தளம் புதிதாக உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் தொய்வு ஏற்பட்டது.

         இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 21-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இடையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வேறு வந்ததால், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவை நீக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, மீண்டும் அந்த பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

      இந்த நிலையில், வரும் 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்து உள்ளார்.

Pages