மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 27 January 2019

422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்'



           வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கைதான, 422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். 

    'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 22ம் தேதி முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம், பணிக்கு செல்லாமல், தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 422 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். 

         இவர்கள் அனைவரும், நேற்று இரவு, பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.'மற்ற ஆசிரியர்கள், நாளைக்குள் வேலைக்கு திரும்பினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார். 

        இதற்கிடையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு, இன்றும் ஆள் எடுக்கும் பணி நடக்கிறது. இதற்கு, 'இடைநிலை மற்றும் பட்டப் படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்தவர்களுக்கு, 'டெட்' கட்டாயமில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

Pages