Everyone is Important..!!
One day teacher came to class and gave his student a test. All the students read all the questions and surprised to see the last question in the test.
Question was : What is the name of woman who cleans the classroom??
Students were confused seeing this question and thought that this might be some kind of joke. Students finished the test but all of them left last question.
After finishing test one of student got up and asked if the last question would count toward the quiz grade. Teacher smiled and said, ′Absolutely..′ Another student said, ′Sir, i have seen her many time but how would i know her name??′ Teacher said, ′In your careers, you will meet many people and all of them are significant. They were helping for your future, without knowing they also play an single role in your future.′
Moral : Everyone living in this world is Significant.
ஒரு நாள் ஆசிரியர் வகுப்பிற்கு வந்து அவருடைய மாணவர்களுக்கு ஒரு பரீட்சை வைத்தார். அனைத்து மாணவர்களும் எல்லா கேள்விகளையும் படித்துவிட்டு கடைசி கேள்வியை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
அந்தக் கேள்வி என்னவென்றால் : உங்களுடைய வகுப்பை சுத்தம் செய்யும் பெண்மணியின் பெயர் என்ன?
இந்தக் கேள்வியை பார்த்த மாணவர்கள் குழப்பமடைந்து, இது ஒருவகையான நகைச்சுவையாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். மாணவர்கள் அனைவரும் அந்த கடைசி கேள்வியை விட்டு விட்டு பரீட்சையை எழுதி முடித்தார்கள்.
பரீட்சையை முடித்த பிறகு, ஒரு மாணவன் எழுந்து கடைசி கேள்வி வினாடிவினா தரவரிசைக்கு கணக்கிடப்படுமா என்று கேட்டான். ஆசிரியர் சிரித்துக் கொண்டே 'ஆம் நிச்சயமாக" என்றார், உடனே இன்னொரு மாணவன் எழுந்து 'ஐயா நான் பலமுறை அவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் அவர்களுடைய பெயர் எனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்க, ஆசிரியர் 'நீ உன்னுடைய வாழ்வில் பல மக்களை சந்திக்கலாம், அவர்கள் அனைவருமே குறிப்பிடத்தக்கவர்களே. அவர்கள் உங்களுடைய எதிர்காலத்தின் ஒரு ஒற்றை பாத்திரம் என்பது தெரியாமலே உங்களுடைய வருங்காலத்திற்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
நீதி : இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே குறிப்பிடத்தக்கவர்கள் தான்.