A dealer at a Ship..!!
A dealer once traveled to abroad through a ship. At that time, he had a lot of money and expensive items.
He was assigned to a room on the ship. And it was alloted for an other person also. The man was very strong and very tall. He has no faith on him.
He did not want to keep the expensive items in the room. So he went to the locker room on the ship and said to the responsible, Keep these expensive items here safely. I could not believe the person with me.
Locker guard then replied ′It′s okay, give it to me. I will keep it safely. But one thing, the person who stay with you just came here before few minutes and said the same reason as you have said and gave his goods and told me to keep his goods safe′.
ஒரு வியாபாரி ஒருவர் ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்புள்ள பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அவர் மிக பலசாலியாகவும், நல்ல உயரமாகவும் இருந்தார். வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு இஷ்டமில்லை. எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம், இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராக எனக்குத் தெரியவில்லை என்றார்.
பெட்டகக் காப்பாளர் 'பரவாயில்லை, கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும், சற்று நேரத்திற்கு முன் இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்." என்றார்.