Fox and the Goat !!
Once a fox was roaming around in the dark. Unfortunately, he fell into a well. He tried his level best to come out but all in vain.
So, he had no other alternative but to remain there until the next morning. The next day, a goat came that way. She peeped into the well and saw the fox there. The goat asked, ′what are you doing there, Mr. Fox?′
The sly fox replied, ′I came here to drink water. It is the best I have ever tasted. Come and taste yourself.′ Without thinking even for a while, the goat jumped into the well, quenched her thirst and looked for a way to get out. But just like the fox, she also found herself helpless to come out.
Then the fox said, ′I have an idea. You stand on your hind legs. I′ll climb on your head and get out. Then I shall help you come out too.′ The goat was innocent enough to understand the shrewdness of the fox and did as the fox said and helped him get out of the well.
While walking away, the fox said, ′Had you been intelligent enough, you would never have got in without seeing how to get out.′ The Goat understood the fox trick.
Moral: Look before you leap. Do not just blindly walk into anything without thinking.
ஒருநாள் நரி ஒன்று இருட்டில் உளாவிக் கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக நரி ஒரு கிணற்றில் விழுந்துவிட்டது. நரியும் வெளியே வர முயற்சி எடுத்தது ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டது. நரிக்கும் வேறு மாற்று வழி இல்லாமல் அடுத்த நாள் வரும் வரை அங்கேயே தங்கி விட்டது. அடுத்த நாள் ஒரு ஆடு ஒன்று அந்த வழியே வந்தது. கிணற்றில் விழுந்த நரியை ஆடு பார்த்தது. ஆடு நரியிடம், 'நீ அங்கே என்ன செய்கிறாய்?" என்றது.
தந்திரமான நரி உடனே 'நான் இங்கு தண்ணீர் குடிக்க வந்தேன். இதுவரை நான் சுவைத்ததிலேயே மிகவும் சுவையான தண்ணீர் இங்குதான் உள்ளது. வாருங்கள், நீங்களே வந்து சுவைத்துப் பாருங்கள் என்றது நரி". ஆடும் சிறிது நேரம் கூட யோசிக்காமல், கிணற்றில் குதித்தது, அதனுடைய தாகத்தைத் தணித்து விட்டு வெளியேற ஒரு வழியைக் கண்டது. ஆனால் நரியை போலவே, அதனால் வெளியே வர முடியவில்லை.
பிறகு நரி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நீ உன் பின்னங்காலில் நில். நான் உன் தலை மீது ஏறி வெளியே சென்று விடுகிறேன், நான் வெளியே சென்றவுடன் உன்னை வெளியேற்ற உதவுவேன் என்றது. நரியின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளாத ஆடு நரி கூறியவாறே கிணற்றில் இருந்து வெளியேற உதவியது.
நரி மேலே சென்று, நீ அவ்வளவு புத்திசாலியாக இருந்தால் கிணற்றில் இருந்து எப்படி வெளியே வருவது என்று நினைக்காமல் எப்படி உள்ளே இறங்கினாய் என்பதை யோசி என்றது. நரியின் தந்திரத்தை ஆடு புரிந்துக் கொண்டது.
நீதி : ஆழம் தெரியாமல் காலை விடாதே. சிந்தித்துப் பார்க்காமல் குருட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்கள்.