Little Boy′s Meeting with God !!
There once was a little boy who wanted to meet God. He knew it would take long days to visit the God, so he packed his suitcase with some cake and soft drinks and started his journey. After crossing three blocks, he met an old woman. She was sitting in the park just staring at some pigeons.
He noticed that the old lady looked hungry, So the boy sat down next to her and opened his suitcase and offered her a cake piece. She gratefully accepted it and smiled at him. Her smile was so pretty that the boy wanted to see it again, so he offered her a soft drinks. Once again she smiled at him. The boy was delighted!
As it grew dark, he got up to leave but before he had gone more than a few steps, he turned around, and looked the old women, she gave him her biggest smile ever. When the boy opened the door to his own house a short time later, his mother was surprised by the look of joy on his face. She asked him, ′What did you do today that made you so happy?′ He replied, ′I had lunch with God.′
Meanwhile, the old woman, also radiant with joy, returned to her home. Her son was stunned by the look of peace on her face and he asked, ′Mother, what did you do today that made you so happy?′ She replied, ′I ate cake in the park with God.′
Moral: God is everywhere. We just need to share our happiness and make others smile to feel him.
ஒருமுறை சிறிய பையன் ஒருவன் கடவுளை சந்திக்க விரும்பினான். கடவுளை சந்திக்க நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்று அவனுக்கு தெரியும், அதனால் அவன் சில ரொட்டிகளையும் குளிர்பானங்களையும் தன்னுடைய கைப்பெட்டியில் எடுத்துக் கொண்டு தனது பயணத்தை தொடங்கினான். அவன் மூன்று முடக்குகளை கடந்துச் சென்ற பின்னர், ஒரு வயதான பெண்மணி ஒருவர் பூங்காவில் உட்கார்ந்து சில புறாக்களை பார்த்து கொண்டிருந்ததை அவன் கவனித்தான்.
அந்த வயதான பெண்மணி மிகவும் பசியாக இருப்பதை கவனித்து, பையன் அந்த வயதான பெண்மணிக்கு அருகே உட்கார்ந்து, அவரது கைப்பெட்டியை திறந்து, ஒரு துண்டு ரொட்டியை எடுத்து கொடுத்தான். அந்த வயதான பெண்மணி அதை நன்றியுடன் ஏற்றுக்கொண்டு அவனை பார்த்து சிரித்தாள். அந்த வயதான பெண்மணியின் புன்னகை அவ்வளவு அழகாக இருந்தது, பையன் அதை மீண்டும் பார்க்க விரும்பினான், அதனால் மீண்டும் அந்த பெண்மணிக்கு குளிர்பானத்தை கொடுத்தான். மீண்டும் அந்த பெண்மணி அவனை பார்த்து சிரித்தாள். சிறுவன் மகிழ்ச்சியடைந்தான்!
இருண்ட பின்னர், அந்தச் சிறுவன் தன்னுடைய வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டான். சிறிது தூரம் சென்று அந்த பெண்மணியை திரும்பி பார்த்தான் அந்த பெண்மணி மீண்டும் அவனைப் பார்த்துச் சிரித்தாள். சிறுவன் தனது வீட்டிற்கு சென்று கதவைத் திறந்தபோது, அவனுடைய முகத்தில் மகிழ்ச்சியின் தோற்றத்தைக் கண்டு அவனுடைய அம்மா ஆச்சரியமடைந்தாள். 'நீ இன்று என்ன செய்தாய்? நீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்?" என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிறுவன் 'இன்று நான் கடவுளுடன் மதிய உணவைச் சாப்பிட்டேன்" என்று பதிலளித்தான்.
இதேபோல, வயதான பெண்மணி, மகிழ்ச்சியோடு தனது வீட்டிற்கு திரும்பினாள். அவளுடைய மகன் அவளை பார்த்து அதிர்ச்சியடைந்து 'அம்மா, இன்று உனக்கு என்ன ஆனது?" என்று கேட்டான். 'கடவுளோடு பூங்காவில் நான் ரொட்டி சாப்பிட்டேன்" என்று பதிலளித்தாள்.
நீதி : கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு, மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும்.