The Lovely Girl With Two Guava..!!
A Father and his Daughter were playing in the park. His young daughter spotted an guava vendor. She asked her father to buy her an guava. Father didn′t bring much money with him, but it was enough to purchase two guava. So, he bought two Goa and gave his daughter.
His daughter held one guava each in her two hands. Then a father asked her if she can share one guava with him. Upon hearing this, his daughter quickly took a bite from one guava. And before her father could speak, she also took a bite from the second guava.
Father wondered that his daughter behaved in such a greedy way and the smile was disappeared from his face.
And suddenly his daughter with an guava in her one hand said, ′Father have this one, this one is much juiciest and sweeter′. Her father was speechless. He felt bad about reaching to the judgement so quickly about a small child. But, his smile came back now knowing why his daughter quickly took a bite from each guava.
Moral: Don′t Judge anything too quickly.
பூங்காவில் ஒரு தந்தையும் மகளும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மகள் ஒரு கொய்யா விற்பனையாளரை கண்டு தனக்கு கொய்யாப்பழம் வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டாள். தந்தையிடம் அதிகமாக பணம் இல்லை, இரண்டு கொய்யாப்பழத்தை வாங்குவதற்கு போதுமான பணம் அவரிடம் இருந்தது. எனவே, அவர் இரண்டு கொய்யாப்பழத்தை மட்டும் வாங்கி தனது மகளிடம் கொடுத்தார்.
அவரது மகள் தன் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு கொய்யாப்பழத்தை வைத்திருந்தார். என்னுடன் ஒரு கொய்யாப்பழத்தை ஒன்றை பகிர்ந்து கொள்ள முடியுமா? என்று தந்தை மகளிடம் கேட்டார். இதைக் கேட்டதும், அவருடைய மகள் விரைவாக ஒரு கொய்யாப்பழத்தை கடித்தாள். மீண்டும் அவளுடைய தந்தை அவளிடம் கேட்பதற்கு முன்பே, இரண்டாவது கொய்யாப்பழத்தையும் கடித்து விட்டாள்.
அவருடைய மகள் அத்தகைய பேராசையுடன் நடந்துக் கொண்டதை நினைத்து தந்தை மிகவும் அதிர்ச்சியடைந்தார், முகத்தில் இருந்த புன்னகையும் மறைந்து விட்டது.
திடீரென்று அவரது மகள் தன் கையில் இருந்த கொய்யாவை தந்தையிடம் கொடுத்து, 'தந்தையே இதுதான் மிகவும் சுவையாகவும், இனிப்பாகவும் இருக்கிறது" என்றாள். அவளது தந்தை பேச முடியாமல் திகைத்து நின்றார். சிறிய குழந்தையைப் பற்றி தவறாக நினைத்ததை நினைத்து மிகவும் வருத்தினார். பழத்தை பகிர்ந்துக் கொள்ளலாமா என்று கேட்டவுடன் மகள் ஏன் விரைவாக பழத்தை கடித்தாள் என்று தற்போது அவருக்கு புரிந்து விட்டது. அவருடைய முகத்தில் புன்னகையும் திரும்ப வந்துவிட்டது.
நீதி : எந்த ஒரு செயலையும் விரைவாக தீர்மானிக்க வேண்டாம்.