புத்திசாலி அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், தன் ராஜ்ஜியத்திற்கு ஒரு புதிய முதலமைச்சரை நியமனம் செய்ய விரும்பினார். அவரது மூன்று அமைச்சர்களின் அறிவை சோதித்து, புதிய முதலமைச்சராக அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க விரும்பினார்.
அரசர் மூன்று அமைச்சர்களையும் தனது அறைக்கு அழைத்து, நீங்கள் காட்டில் இருந்து பல இளம் விலங்குகளை கொண்டு வர வேண்டும் என்றார். இந்த பணிக்காக உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நாள் தருகிறேன் என்று கூறினார். அரசர், அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதை சோதிக்க விரும்பினார்.
விரைவில் மூன்று அமைச்சர்களும் பல காடுகளுக்கு சென்றனர். ஒரு நாள் இரண்டு அமைச்சர்கள் ஐந்து யானை கன்றுகள், இரண்டு கரடி குட்டிகள் மற்றும் இரண்டு புலி குட்டிகளைக் கொண்டு வந்தார்கள். மூன்றாவது அமைச்சர் வெறுங்கையுடன் வந்தார். அரசர் வெறும் கையுடன் வந்ததற்கான காரணத்தை மூன்றாவது அமைச்சரிடம் கேட்டார். அதற்கு, அவர் அரசே! இந்த இளம் விலங்குகள் அவற்றின் தாயிடம் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு சிறியவை. அவற்றின் தாய்களும் அவைகளை இழந்து வாடும். இதை செய்ய என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்று பதிலளித்தார்.
அரசர், நீங்கள் இந்த விலங்குகளை பற்றி மிகவும் யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்கள் மூன்று பேரையும் சோதித்து பார்க்க விரும்பினேன். மூன்றாவது அமைச்சரின் அன்பான செயலின் காரணமாக, அரசர் அவரை தனது ராஜ்ஜியத்தின் புதிய முதலமைச்சராக அறிவித்தார்.
நீதி : நேர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை செயல்கள், நேர்மறையான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.