அன்று மிகவும் வெப்பமான நாள், சிங்கம் மிகவும் பசியாக இருந்தது. அது தன்னுடைய குகையிலிருந்து வெளிவந்து இரைக்காக அங்கும் இங்கும் தேடியது. அதற்கு சிறிய முயல் ஒன்று மட்டுமே கண்ணில் பட்டது, சற்று தயக்கத்துடனே அந்த முயலை பிடித்து 'இந்த முயல் என் வயிற்றை நிரப்பாது" என்று சிங்கம் நினைத்தது.
சிங்கம் அந்த முயலைப் கொள்வதற்கு முன், அந்த வழியில் மான் ஒன்று ஓடுவதை பார்த்து, பேராசை கொண்டு 'இந்த சிறிய முயலை சாப்பிடுவதற்கு பதிலாக, நான் பெரிய மானை சாப்பிடலாம்." என்று எண்ணியது.
அதனால் சிங்கம் அந்த முயலை விட்டுவிட்டு, மானின் பின்னால் சென்றது. ஆனால் மான் காட்டிற்குள் மறைந்து விட்டது. சிங்கம் இப்போது முயலை விட்டு விட்டதை நினைத்து வருத்தப்பட்டது.
நீதி : அரசனை நம்பி புருஷனை கைவிடாதே.