🌳ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான மரங்களை பார்க்கிறோம். ஆனால் சில மரங்களின் பெயர்கள் மற்றும் பயன்கள் நமக்கு தெரிவதில்லை. அத்தகைய மரங்களில் ஒன்றுதான் மல்பெரி மரம். அந்த மரம் குறித்து இங்கு காண்போம்.
🌲 மல்பெரி மரத்தின் தாவரவியல் பெயர் மோரஸ் ஆல்பா என்பதாகும்.
🌲 இந்த மரத்தின் தாயகம் மத்திய மற்றும் கிழக்கு சைனா ஆகும்.
🌲 மல்பெரி மரம் 10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் வயது சுமார் 250 ஆண்டுகள்.
🌳மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப் படுகின்றன.
🌲 ஏப்ரல் முதல் மே மாதங்களில் மல்பெரி விதைகளை வளமான மண்ணில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம்.
🌲 பட்டுப் புழு வளர்க்கும் இடங்களில் எல்லாம் இந்த மரத்தின் பெயர் பட்டுப்பூச்சி மரம் என்பதாகும்.
🌲 அதாவது பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை.
🌲 ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.
🌲 இரண்டு வகையான பட்டுப்புழுக்கள் உள்ளன. அதாவது வெண்பட்டு தரும் பட்டுப்புழு மற்றும் மஞ்சள்பட்டு தரும் பட்டுப்புழு என்பவையாகும்.
🌲 குளிர்ச்சியான பகுதிகளில் இந்த மரம் இலைகளை உதிர்க்கும். வெப்பமான பகுதிகளில் இது பசுமை மாறாத வண்ணம் காணப்படும்.
🌲 கேக் மற்றும் இனிப்பு வகைகள் தயார் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மல்பெரி இலையின் சாற்றின் மூலம் சக்கரை நோயை குணப்படுத்தலாம்.
🌲 கேன்சர், மனச்சோர்வு போன்றவற்றை நீக்கும் தன்மை இந்த மல்பெரி மரத்திற்கு உள்ளது.
🌲 விரைந்து கற்றுக் கொள்ளும் சக்தி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.