சிலர் நீர் ஆகாரங்களை குடித்து விட்டு படுப்பதுண்டு. ஆனால் இந்த மூலிகை டீயை குடித்து விட்டு படுப்பதால் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகிறது.
மூலிகை டீ செய்யும் முறை :
தேவையான பொருட்கள் :
வெந்நீர் – 1 கப்
இஞ்சி – சிறிய துண்டு
இலவங்கப் பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
செய்முறை :
வெந்நீரில் இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றை கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த மூலிகை பொருட்களின் சாறு இறங்கும் வரை 20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
பயன்கள் :
கொழுப்பு :
இரவு உறங்குவதற்கு முன் இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைய பண்ணுகிறது.
சளி தொல்லை :
இந்த மூலிகை டீயை குடிப்பதனால் சளி தொல்லை நீங்குகிறது. உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.
நச்சுக்களை அழிக்கிறது :
இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால், நமது உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கிறது. இது நமது உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதயம் :
இந்த மூலிகை டீயை குடித்து விட்டு உறங்கினால் இதயத்தில் காணப்படும் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக விடுதலை அளிக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.