சமையலுக்கு வெங்காயம் அடிப்படை தேவை. வெங்காயத்தை நறுக்கும் போது மட்டும் கண்களில் கண்ணீர் வருகிறது.
காரணம் வெங்காயத்தை நறுக்கும் போது, ஆலினேஸ் என்ற நொதி, அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு திரவம் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இது எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து கண்களுக்கு எரிச்சலூட்டி கண்ணீர் சுரப்பிகளை தூண்டுகின்றன. இதனால் கண்ணீர் வருகிறது. கண்களுக்கு எரிச்சலூட்டும் வாயுக்களை சரிசெய்து கண்களை பாதுகாக்கவே கண்ணீர் வருகிறது.