Martial Arts..!!
A student who wants to learn the martial arts and he approached the Guru and asked him, ′How long does it take to learn this art′? The Guru answered ′10 years′.
The student became dissatisfied by hearing the Guru′s answer, And then asked Guru, I want to learn it within ten years. I will practice every day. If necessary, I will take up to 10 times more training. So how long does it take to learn it now? After hearing all these, Guru replied ′20 years′.
The student was very shocked to hear this and asked Guru for the reason, then Guru replied ′You can′t learn speedly. It should be accompanied by eagerness and determination in the goal′.
தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவன் குருவை அணுகி 'இக்கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை"? எனக் கேட்டான். குரு 'பத்து வருடங்கள்" எனப் பதில் அளித்தார்.
குருவின் பதிலால் மாணவன் பொறுமையை இழந்து திருப்தியற்று, மீண்டும் குருவிடம் 'பத்து வருடங்களுக்குள் விரைவாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கிறேன். தேவைப்பட்டால், பயிற்சிகளை 10 மடங்கு அதிகமாக செய்கிறேன். ஆகவே இதன்படி கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை"? என்றான். இதைக் கேட்ட குரு, 'இருபது வருடங்கள்" என்றார்.
இதைக் கேட்ட மாணவன் மிகவும் அதிர்ச்சி அடைந்து, ஏன் குருவே என்று கேட்க, குரு 'வேகத்தினால் கற்றுக் கொள்ள முடியாது. இலக்கு மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி என்பவற்றும் சேர்ந்து இருக்க வேண்டும்" என்றார்.
நீதி : பதறிய காரியம் சிதறும்.