🌿 பேரிச்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதாக ஜீரணமாகும். உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.
🌿 கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்;சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனங்களை நீக்குவதிலும் பேரிச்;சைக்கு ஈடு இல்லை.
🌿 இதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் இரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது.
🌿 டேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பேரிச்;சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, இரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது.
🌿 சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
🌿 பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. இதனால் ஏற்படும் பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
🌿 பேரிச்;சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரிச்;சையில் 0.90 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது. இரும்புத் தாது, இரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது இரத்ததில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ப்ளேட்ளெட்ஸ் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
🌿 'வைட்டமின் ஏ", பேரிச்;சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.