காற்று அல்லது வாயு நிலைக்கு வடிவம் இல்லை. காற்று இல்லாத கோளில் புட்டியைத் திறந்தால் காற்று சட்டென வெளியேறிப் பரவி, புட்டி வெற்றிடமாகும்.
வெளியேறிய காற்று அந்தக் கோளைச் சுற்றிப் படரும். புட்டியில் அடைத்துச் செல்லும் காற்றின் அளவு மிகமிகக் குறைவாக இருப்பதால், சூழலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பூமியில், காற்றில் உள்ள ஆக்சிஜன் ஈரப்பசை கொண்ட இரும்போடு வினைபுரிந்து இரும்பு ஆக்சைடு எனும் துரு வடிவிலான திடப் பொருளாக மாறும். அதுபோல புட்டியிலிருந்து வெளியேறிய காற்று, அந்தக் கோளின் தரைப் பரப்பில் உள்ள பொருட்களோடு வினைபுரிந்து திடப்பொருளாகவும் மாறலாம்.