கல்வியின் முழுப் பயன் எது? என்பதை உணர்ந்து அதை கற்க வேண்டும். “கற்க கசடற, நிற்க அதற்குத் தக” என்கிறது குறள். இன்று பயங்கரவாதம், ஊழல், லஞ்சம், பாலியல் வன்முறை என்று பல சம்பவம் நடப்பதை காண்கிறோம். அதில் ஈடுபட்டவர்களைப் பார்த்தால் அதிகம் பேர் மெத்தப் படித்தவர்கள். மதிப்பான பதவியில் இருப்பவர்கள். கல்வி இவர்களுக்கு கற்றுத் தந்தது என்ன? ஒழுக்கக் கல்வி என்பது பிறக்கும்போதே ஆரம்பித்து விட வேண்டும்.
மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும்.
மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும்.
ஒழுக்கம் என்பது யாரும் இல்லாத போதும் நம் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் நேர்மையாக இருப்பதே. அது மனசாட்சியின் வடிவம். அதை மீறி நடந்தால் பின் வாழும் நாள் வரை உறுத்தலோடுதான் வாழ வேண்டும்.
பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருந்தால் வாழ்நாள் முழுதும் மதிப்பும், கவுரவமாக வாழலாம். சந்தோஷம் என்பது கோடீஸ்வரனாக வாழ்வதில் இல்லை. மற்றவர்களால் வணங்கத் தக்க விதத்தில் நல்ல சான்றோர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி அடங்கி உள்ளது.