உங்களுக்கு ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது. ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது.
பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே. எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!
தவறுகள் அனுபவங்களை கொடுக்கும். அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
ஒருவருடன் பேசும்போது நீங்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறீர்கள் என்பதை விட, நீங்கள் கூறுவதை அவர் என்ன அர்த்தத்தில்
புரிந்து கொள்கிறார் என்பதை கவனித்து பேசுங்கள்....
எந்த விமானமும் ஓடுபாதை முடிந்து விட்டது என்று நின்று விடுவதில்லை....
அங்கு தான் அது பறக்கத் தொடங்குகிறது.
எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் இடம் தான் ஒரு புதிய செயலின் ஆரம்பம்....