மருத்துவர் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் தனது துணிகளை மாற்றிக் கொண்டு அறுவை சிகிச்சை அறைக்கு நேரடியாக சென்றார். அவருக்காக காத்திருந்த அடிப்பட்ட மகனின் அப்பாவை பார்த்தார்.
மகனின் தந்தை உடனே, இங்கு வர ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள்? என் மகனின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லையா? என்று கோபத்துடன் கேட்டார்.
மருத்துவர் சிரித்துக் கொண்டே என்னை மன்னித்து விடுங்கள், நான் அப்போது மருத்துவமனையில் இல்லை, மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தவுடனே அவசர அவசரமாக நான் இங்கு வந்துவிட்டேன், இப்போது நீங்கள் அமைதியாக இருங்கள், என்று மருத்துவர் கூறினார்.
அமைதி கொள்வதா? உங்கள் மகன் இப்போது இந்த அறையில் இருந்திருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்களா? உங்கள் சொந்த மகன் இறந்துவிட்டால் மருத்துவர் உங்களை காத்திருங்கள் என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கோபமாக கூறினார் அந்த மகனின் தந்தை. மருத்துவர் சிரித்துக் கொண்டே அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றார்.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து, உங்கள் மகன் காப்பாற்றப்பட்டான்! என்று கூறிவிட்டு, தந்தையின் பதிலுக்கு காத்திருக்காமல் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், செவிலியரிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
செவிலியரை கண்டவுடன், மருத்துவர் ஏன் இவ்வளவு திமிர் பிடித்தவராய் இருக்கிறார்? என்று அந்த மகனின் தந்தை கேட்க, செவிலியர் கண்ணீர் மூழ்க அவருடைய மகன் நேற்று சாலை விபத்தில் இறந்துவிட்டான், நாங்கள் அவரை அழைத்தபோது அவருடைய மகனின் இறுதி காரியத்தில் இருந்தார். அங்கிருந்து வந்து இப்போது அவர் உங்கள் மகனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, அவர் மகனின் இறுதி காரியத்திற்கு சென்று விட்டார் என்றார் செவிலியர்.
நீதி : எப்பொழுதும் யாரையும் எளிதில் தீர்மானித்து விடாதீர்கள், ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டீர்கள்.