இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிக ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கி பெருமை சேர்க்கும் பெண் குழந்தைகளின் சாதனைகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் அமைகிறது.
அவ்வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய சமூகத்தில் பெண் குழந்தைகள் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. இதை பல ஆய்வுகள் நமக்கு உணர்த்தி உள்ளன. இளம் வயதில் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் இந்த பெண்கள், குழந்தைப் பேறு சிக்கல், பிரசவ கால மரணம் என பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர்.
பாலியல் வன்முறைகளாலும் பெண் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க தனி சட்டம் உள்ளது. ஆனாலும், இந்த கொடுமைகளின் சுவடுகள் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன.
இதுபோன்ற நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும், மக்கள் மனதில் முதலில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு அடிமனதில் ஏற்பட்டால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியமாகும். பெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்கி அவர்களைப் பேணிப் பாதுகாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.