What is Greed?
A student asked his teacher, ′What is Greed?′ The teacher said, ′In order to answer your question, go through the chocolate factory next to our school and pick one chocolate you like the most. But there is a rule. As you pass through the factory, you can not turn back. You must pick the chocolate as you go forward only.′
The student went to the chocolate factory. As he walked through, He saw a big chocolate he instantly liked it but he wondered that he may find much bigger one further. So, he walked further, then he saw another chocolate. But again, he thought the same. When he started to reach near the end of the factory, he couldn′t see any chocolates as big as the one he didn′t pick earlier and started to regret his decision of letting it go.
He went back to the teacher with an empty hand and gave an explanation of what he did.
The teacher told him, ′You got a big chocolate, but you thought that you need bigger than that, and again you found a big chocolate again thought the same.′ This was called as greedy.
ஒரு மாணவன் ஒருவன் தன்னுடைய ஆசிரியரிடம் பேராசை என்றால் என்னவென்று கேட்டான். உடனே ஆசிரியர் அவன் கேள்விக்கு பதிலளிக்க, நம்முடைய பள்ளிக்கு அருகில் உள்ள சாக்லேட் தொழிற்சாலைக்குச் செல், அங்கு உனக்கு மிகவும் பிடித்த ஒரு சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொள். ஆனால் ஒரு விதி இருக்கிறது. நீ தொழிற்சாலை வழியாக செல்லும்போது, செல்லும் வழியிலே நீ திரும்பி வரக்கூடாது. நீ முன்னோக்கி செல்லும் போது மட்டுமே சாக்லேட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆசிரியர்.
மாணவனும் சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்றான். அவன் நடந்து செல்லும் போது, ஒரு பெரிய சாக்லேட்டை ஒன்றை பார்த்தான், பார்த்தவுடன் அவனுக்கு அது ரொம்ப பிடித்து விட்டது, ஆனால் அதை விட பெரியது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என எண்ணினான். எனவே, அவன் மீண்டும் நடந்துச் சென்றான், பின்னர் அவன் மற்றொரு சாக்லேட்டை பார்த்தான். ஆனால் மீண்டும் அவன் அதை விட பெரியது கிடைக்கும் என்று நினைத்தான். அவர் தொழிற்சாலையின் இறுதியை நெருங்கிய போது, அவனுக்கு முன்னர் கிடைத்த பெரிய சாக்லேட்டை விட பெரியது அவன் பார்க்க வில்லை, அவனுடைய முடிவை நினைத்து அவன் வருத்தப்பட ஆரம்பித்தான்.
மாணவனோ வெறும் கையுடன் ஆசிரியரிடம் திரும்பிச் சென்று, அவன் செய்ததைப் பற்றி விளக்கினான்.
ஆசிரியர் மாணவனிடம், 'உனக்கு ஒரு பெரிய சாக்லேட் கிடைத்தது, ஆனால், அதை விட பெரியது வேண்டுமென்று ஆசைப்பட்டாய். மீண்டும் ஒரு பெரிய சாக்லேட் ஒன்றை கண்டாய் மறுபடியும் அவ்வாறே ஆசைப்பட்டாய்" இதைதான் பேராசை என்பார்கள் என்றார் ஆசிரியர்.
நீதி : பேராசை பெருநஷ்டம்.