தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், இன்று (ஜனவரி 7-ம் தேதி) முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட இருக்கிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ரூ.258 கோடியில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு ஆகும்.