திருவனந்தபுரம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு, கடந்தாண்டு, மேட்டுப்பாளையம் மாநகராட்சி பள்ளி மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, பள்ளியில் விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவிகள் பங்கேற்றனர். இதில் விண்வெளி ஆய்வு மையத்தின் பணி, இஸ்ரோ அமைப்பின் செயல்பாடு, &'டெலஸ்கோப்&' செயல்படும் விதம் குறித்து மாணவருக்கு விளக்கப்பட்டது. பள்ளியின் முதல் மாடியில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கி கருவி உதவியுடன் வானில் நட்சத்திரங்கள், கிரகங்களில் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.முன்னதாக, ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுசீலா தலைமை வகித்தார். இக்கண்காட்சி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தது.