மனிதர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள்கள் "ஸ்மார்ட்' ஆக மாறி வருகின்றன. இந்த தொழில்நுட்பம், காலணிகளில் (ஷூ) புகுத்தப்பட்டு ஸ்மார்ட் ஷூக்கள் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக கூடைப்பந்து வீரர்களுக்கு இந்த ஸ்மார்ட் காலணிகளை நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுவாக, நாம் ஷூக்களை அணிய, அதில் உள்ள கயிறுகளை (லேஸை) இறுக்கமாக கட்டிக் கொள்வோம். ஆனால், இந்த ஸ்மார்ட் ஷூக்களில் நமது கால்களை உள்ளே நுழைத்தால் மட்டும் போதும். நமது கால்களின் மேற்பகுதியின் அளவுக்கு ஏற்ப, ஷூ இறுகிக் கொள்ளும்.
இதனை ஸ்மார்ட் ஷூக்களின் கீழ் உள்ள பொத்தான்களின் மூலம் நாம் தேவையான இறுக்கத்தைச் செய்து கொள்ளலாம், அல்லது நமது ஸ்மார்ட் போனில் உள்ள செயலி (ஆப்) மூலமும் இயக்கலாம்.