பிறகு மொபைல் நம்பர் மற்றும் ரீசார்ஜ் தொகையை தேர்வு செய்ய வேண்டும். இங்கு குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்கும் சிறப்பு சலுகைகளை பார்த்து அவற்றை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரீசார்ஜ் தொகையை கட்டணம் செலுத்துவதற்கான பக்கத்தில் சென்று பண பரிமாற்ற முறையை தேர்வு செய்து பணம் செலுத்த முடியும். இதில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மொபைல் ரீசார்ஜ் அம்சத்தில் தற்சமயம் வரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், யுபிஐ அல்லது மற்ற மொபைல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் வசதி இன்னும் வழங்கப்படவில்லை.