Making a Difference..!!
Tom used to go for walk every day on beach. One day there he noticed a man who was leaning down to pick up something and then throw it into water.
When he got close he saw that, person was picking up starfish and throwing them back in the water.
Tom got confused and approached that man and said, ′Good evening, what are you doing?′ I was wondered.
Man smiled and replied, ′I am throwing back starfish which were washed up on shore and if i don′t throw them back into ocean then they will die up here because of lack of oxygen.′
Tom replied, ′I understand..′ Then a little while later he said, ′But there must be thousands of starfish on this beach and you can′t throw them into the sea right? And this may be happening on hundreds of beaches.. then how does throwing some of these starfish back in ocean can make a difference??′
Man smiled. he bent down and picked up yet another starfish, then threw it back into ocean and then pointing toward that fish he replied, ′It would make difference to that one..!!′
Moral : Every creature is important in this world.
டாம் ஒவ்வொரு நாளும் கடற்கரையில் நடப்பார். ஒரு நாள் கடற்கரையில் ஒரு மனிதர் குனிந்து கொண்டு ஏதோ ஒன்றை எடுத்து, அதை தண்ணீருக்குள் வீசுவதை கவனித்தார்.
அந்த மனிதனை நெருங்கி சென்ற போது, நட்சத்திரமீன்களை கையால் எடுத்து அவற்றைத் மீண்டும் தண்ணீரில் தூக்கி எறிவதை கவனித்தார்.
குழப்பமடைந்த டாம், அந்த மனிதனை அணுகி, 'மாலை வணக்கம், நீ என்ன செய்கிறாய்?" எனக்கு வியப்பாக உள்ளது.
அந்த மனிதன் சிரித்துக் கொண்டே, 'நான் கரையில் இருக்கும் நட்சத்திர மீன்களை மீண்டும் கடலில் வீசுகிறேன், நான் அவற்றை கடலில் வீசவில்லை என்றால் அவை ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்துவிடக் கூடும்.
டாம் உடனே நான் புரிந்துகொண்டேன் என்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து 'இந்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் இருக்கும் அவை அனைத்தையுமே உங்களால் கடலில் வீச முடியாது அல்லவா?" என்று கேட்டார். இது போல நூற்றுக்கணக்கான கடற்கரையில் நடக்கும், அவ்வகையில் நட்சத்திர மீன்கள் சிலவற்றை மட்டும் நீங்கள் கடலில் எறிவதால் எப்படி ஒரு வித்தியாசத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்? என்று கேட்டார்.
அவர் சிரித்துக் கொண்டே கீழே குனிந்து மற்றொரு நட்சத்திர மீன் எடுத்து, அதை கடலுக்குள் எறிந்துவிட்டு, அந்த மீனை நோக்கி சுட்டிக்காட்டி, 'இது நட்சத்திர மீனுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்..!" என்று கூறினார்.
நீதி : இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் முக்கியம் தான்.