உலகிற் சிறந்தது தமிழ் மொழியின் என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனாலும் அவற்றின் சில கூறுகளை நாம் பயன்படுத்தாமலேயே வாழ்ந்து வருகிறோம்.
நாட்காட்டிகளிலும், கணித செயல்பாடுகளிலும் நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்திய அரேபிய எண்கள் ஆகும். தமிழ் தனக்கென எண் உருக்களை கொண்டுள்ளது அவ்வாறான எண்களை தமிழ் எண்கள் என்கிறோம்.
பல ஆண்டுகள் வாய்பாட்டு தாள்களில் மட்டுமே பெயரளவில் இடம் பெற்றிருந்த இந்த தமிழ் எண்கள் இன்று குழந்தைகள் பாடப் புத்தகங்களில் அச்சாகி படித்து வருகின்றனர். தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது.
இந்த நிலையை மாற்றி அமைக்க எங்களது ஒரு சிறிய முயற்சி இந்த " தமிழ் எண்களில் இனியக் கடிகாரம் ".
மேலும் தகவலுக்கு..