மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 13 January 2019

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு !!


🐂 தமிழகத்தில், அறுவடை காலத்தையொட்டி நடத்தப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு. 


🐂 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சில வருடங்களாக தடை ஏற்ப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய பாரம்பரியத்தை காப்பதற்கு தமிழர்கள் ஒன்றிணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த போராட்டத்தால் கடந்த வருடம் எவ்வித தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

🐂 அதே போல் இந்த வருடமும் எந்தவித தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

🐂 பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பல மாவட்டங்களில் பெரும் கோலாகமாக நடைபெறும்.

🐂 அதனால் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் பல மாவட்டங்களில் தொடங்கிவிட்டன.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் :

🐂 அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதி,

🐂 பாலமேட்டில் ஜனவரி 16-ம் தேதி,

🐂 அலங்காநல்லூரில் ஜனவரி 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

🐂 இந்தாண்டு முதல் முறையாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏஇடி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் வரும் 19ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது

🐂 இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகள் :

🐂 மாடு பிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

🐂 காளைகளை அவிழ்த்துவிடும் வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரிகள், பந்தல் போடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

🐂 ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி,

🐂 காளைகளை அடக்க இளைஞர்களுக்குப் பயிற்சி.

🐂 10 ஆம்புலன்ஸ்கள், 3 தீயணைப்பு வாகனங்கள், 10 மருத்துவக் குழு என அனைத்தும் தயார் நிலையில் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் :

🐂 ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு, நிகோடின், கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் தரப்பட்டு உள்ளதா என, சோதனை நடத்தப்பட வேண்டும்.

🐂 ஜல்லிக்கட்டு நடத்தப்படும் குறிப்பிட்ட ஒரு நாளில், பங்கேற்கும் காளைகள், அவற்றின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கும் போட்டியாளர்கள் ஆகியோருக்கு, 'இன்சூரன்ஸ்" செய்யப்பட்டிருக்க வேண்டும்.

🐂 ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அனைத்து இடங்களிலும், விலங்குகள் நல வாரியத்தின் ஆய்வுக் குழுவினர் சோதனை நடத்துவர்.

🐂 ஜல்லிக்கட்டு, வீடியோ படமாக்கப்பட வேண்டும்.

🐂 3 வயது நிரம்பாத காளைகள், 15 வயதை தாண்டிய காளைகள் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

🐂 போட்டியாளர்களுக்கு பிரத்யேக ஆடை வழங்கப்பட வேண்டும்.

🐂 இதுபோன்ற பல விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.

Pages