தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் கொணடாடப்படவில்லை . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது .
மேலும் ,,,
தாய்லாந்தில் ''சொங்க்ரான்'' என்ற பெயரிலும் , லாவோஸில் ''பிம லாவோ'' என்ற பெயரிலும் , மியான்மரில் ''திங்க்யான்'' என்ற பெயரிலும் ,நேபாளத்தில் ''மாகே சங்கராந்தி'' என்ற பெயரிலும் , இலங்கையில் புத்தாண்டாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நம்நாட்டில் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலத்தில் ''லொஹாரி'' எனவும் ,உத்திரபிரதேசம், பீஹார், ராஜஸ்தான் போன்ற இடங்களில் ''மஹா சக்ராத்'' எனவும், குஜராத்தில் ''உத்தராயண்'' எனவும், அஸ்ஸாமில் ''போஹாலி பிஹு'' , ஆந்திரா . கர்நாடகத்தில் ''மகர சங்கராந்தி'' எனவும் பல பெயர்களில் மக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அனைவருக்கும் இனிக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!