நரி ஒன்று இரகசியமாக வயலை கடந்தது. ஆனால் துர்திருஷ்டவசமாக நரி பொறியில் சிக்கிக்கொண்டது. நரி பொறியிலிருந்து வெளிவற கடினமாக முயற்சி செய்தது. கடைசியில் நரி பொறியை விட்டு வெளிவந்தது, ஆனால் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டுவிட்டது. அது தன்னுடைய வால் துண்டிக்கப்பட்டதை நினைத்து மிகவும் வெட்கப்பட்டது.
பிறகு நரி காட்டிற்கு திரும்பியது, அப்போது காட்டில் உள்ள நரியின் நண்பர்கள், நரி வால் இல்லாமல் இருப்பதை கண்டு, 'என்ன ஆயிற்று?" என்று கேட்க, நரி அங்கு நடந்ததை கூற வெட்கப்பட்டு, 'வால் கூடுதல் எடையாக இருந்தது அதனால் நான் அதை வெட்டி விட்டேன்" என்று பதிலளித்தது.
ஆனால் அதனுடைய புத்திசாலி நண்பர்களால் என்ன நடந்தது என்பதை உணர்ந்துக் கொண்டு, நரியிடம் 'அப்படி என்றால், ஏன் நீ வருத்தப்படுகிறாய்?" என்று கேட்க, நரி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
நீதி : வெறும் வார்த்தைகள் உண்மையாக இருக்க முடியாது.