மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 23 January 2019

விதியையும் மாற்றி அமைக்கலாம்.

     ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். 


       அவர் 'எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். 

    வீரர்களின் சந்தேகத்தை தெரிந்துக் கொண்ட ராஜா, போருக்கும் செல்லும் வழியில் கோவிலில் நின்றார். 

     எல்லோரும் பிரார்த்தனை செய்தபிறகு, ராஜா அனைவரின் முன்னிலையில் நின்று கையில் ஒரு நாணயத்தை எடுத்துக் கொண்டு, 'நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோஷத்துடனும் எதிரிகளை தாக்கினர், இறுதியில் அவர்கள் வெற்றிப் பெற்றனர்.

     யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி ராஜாவை பாராட்டி 'விதியை யாராலும் மாற்ற முடியாது, நாம் வென்று விட்டோம்" என்று ராஜாவிடம் சொல்ல 'ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார். 

நீதி : நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

Pages