மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 12 January 2023

இளைஞர்களே இன்று உங்களுக்கான நாள் ! உலகம் உங்கள் கையில் !

முத்தான சிந்தனை துளிகள் !


              'தொடர்ந்து முயற்சி செய்வதே வெற்றிக்கு அழைத்துச் செல்லும். முயற்சி செய்து செய்து சோர்ந்து போகும்போது, முயற்சியைக் கைவிடாதே. முயற்சியில் வெற்றி கிடைத்த பின்புதான் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும். சோர்வடையும் போதெல்லாம் முயற்சியை நிறுத்தினால் எடுத்த எந்தக் காரியத்திலும் வெற்றி கிடைக்காது."


சுவாமி விவேகானந்தர்


        இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.


         சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.


    இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்" மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்" போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.


      சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.


 ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.


     1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!" என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா".


         இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் (1902) காலமானார்.


டாக்டர் பகவான் தாஸ்


        சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் பகவான் தாஸ் 1869ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்தார்.


     இவர் கல்வியிலும், எழுத்துப் பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பல்வேறு மதங்கள், தத்துவங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படித்தார். மேலும் காங்கிரஸில் இணைந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேய ஆட்சி முறை காரணமாக மிக மோசமான நிலையில் இருந்து வந்த இந்திய மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டைக் காக்க வேண்டும் என உறுதியேற்றார்.


    இவருக்கு 1955ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தத்துவமேதையுமான டாக்டர் பகவான் தாஸ் 89வது வயதில் (1958) மறைந்தார்.


Pages